News February 28, 2025
டெல்லி அணியின் ஆலோசகராக பீட்டர்சன் நியமனம்

டெல்லி அணியின் ஆலோசகராக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் 18வது சீசன் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கெவின் பீட்டர்சனை ஆலோசகராக டெல்லி அணி நியமித்துள்ளது. அவர் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி, பந்து வீச்சு பயிற்சியாளர் முனாப் பட்டேல், ஆகியோருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
Similar News
News March 13, 2026
விஜய்யை விளாசிய நடிகை ரஞ்சனா நாச்சியார்

தவெகவில் இருந்தபடியே, நடிகை ரஞ்சனா நாச்சியார் விஜய்யை சாடி வருகிறார். நேற்று தவெக ஆர்ப்பாட்டத்தில், நாம் ஆட்சிக்கு வந்தால் நமது மா.செ.,க்கள் மீதான FIR-களை delete செய்து விடுவோம் என ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், நீங்கள்(விஜய்) CM ஆக விரும்பினால், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க வேண்டும் (அ) சரியான அரசியல் அறிவு இருப்பவர்களை அனுப்ப வேண்டும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசின் புதிய அறிவிப்பு வெளியானது

சமையல் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், இதுதொடர்பான செய்திகள் வெளியிடும் டிவி சேனல்கள் ஒரே வீடியோ/போட்டைவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாமல், தேதி & நேரத்துடன் ஒளிபரப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், மாநில அரசுகள் மாவட்ட அளவில் சிலிண்டர் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News March 13, 2026
அனுஷ்காவுக்கு டும் டும் டும்.. இவர்தான் மாப்பிள்ளை!

இந்திய சினிமாவின் தேவசேனா என வர்ணிக்கப்படும் நடிகை அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அனுஷ்காவின் குடும்பத்தினருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவருடன்தான் அவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாம். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இவர்களது திருமணத்தை நடத்தி முடிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


