News February 28, 2025
மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முன்னேற்பாடு பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தலைமை வகித்து பேசினார். மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச் 3 துவங்கிய 25 வரையிலும் பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 5 முதல் 27 வரையிலும் நடக்கின்றன.
Similar News
News March 5, 2026
கிருஷ்ணகிரியில் தட்டி தூக்கிய திமுக MLA!

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் அ.ம.மு.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகளில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அந்த கட்சிகளில் இருந்து விலகினர். தொடர்ந்து, எம்.எல்.ஏ. மதியழகன் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
News March 5, 2026
கிருஷ்ணகிரி காவல்துறை எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என கூறி, WhatsApp மூலம் ‘SBI Aadhaar Update’ என்ற apk app-யை அனுப்பி கிளிக் செய்யும்படி மோசடிக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு கிளிக் செய்தால் வங்கி கணக்கு தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். ஷேர் IT
News March 5, 2026
கிருஷ்ணகிரி: மாணவிக்கு HM பாலியல் தொல்லை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதியில் அரசு பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அஞ்செட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் சீண்டல் செய்ததாக நேற்று முன்தினம் போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.


