News February 28, 2025
திமுக மொழி அரசியல் செய்யவில்லை: உதயநிதி

அமித்ஷா திமுகவை விமர்சனம் செய்ததை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
தொகுதி வரையறை பற்றி அமித்ஷா கோவையில் பேசியதை, நாடாளுமன்றத்திலும் பேச வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்யவில்லை என்றும், தங்கள் உரிமையை மட்டுமே கேட்பதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
Similar News
News February 28, 2025
Headphone போட்டால் ஆபத்து: அரசு

Earphones, Headphones, Earbuds ஆகியவற்றை நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இப்படி பயன்படுத்துவது, செவியின் கேட்கும் திறனை குறைத்து, நிரந்தர காது கேளாமையை உண்டாக்கக்கூடும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகநேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
News February 28, 2025
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

* https://tnreginet.gov.in/portal/ போர்ட்டலில் யூசர் ஐடி, பாஸ்வோர்டை கொடுத்து உள்நுழையவும்(ஐடி இல்லை என்றால் புதிதாக உருவாக்கவும்) *‘பிறப்பு’ ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் குழந்தையின் பிறப்பு விவரங்களையும், பெற்றோரின் முழு விவரங்களை பதிவிடவும் *பின்னர், https://tnreginet.gov.in/portal/ வழியாகப் பதிவு கட்டணத்தை கட்டவும். இதன் பிறகு, சில நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
News February 28, 2025
முட்டை விலை வீழ்ச்சி

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை நேற்று 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், இன்றும் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60இல் இருந்து ரூ.4.20ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில்லரை விலையிலும் முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில்லரை கடைகளில் முட்டை ஒன்று ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.