News February 28, 2025

200 இடங்களில் திமுக வெல்லும்: நடிகர் வடிவேலு

image

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெல்லும் எனவும், 200 இடங்களில் கண்டிப்பாக பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News February 28, 2025

முட்டை விலை வீழ்ச்சி

image

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை நேற்று 30 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.60ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல், இன்றும் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 40 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ.4.60இல் இருந்து ரூ.4.20ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில்லரை விலையிலும் முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சில்லரை கடைகளில் முட்டை ஒன்று ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.

News February 28, 2025

TV, ஃபிரிட்ஜ்களிலும் வந்த டீப்சீக் AI!

image

சீனாவின் ஹையர், ஹை சென்ஸ், டிசிஎல் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சாதனங்களில் டீப்சீக் AI டெக்னாலஜியை ஒருங்கிணைத்து வருகின்றன. புதிய மாடல் டிவி, ஃபிரிட்ஜ்கள், ரோபோ வேக்யூம் க்ளீனர்களை தயாரித்து வருகின்றன. நாம் கட்டளையிட்டாலே இந்த கருவிகள் இனி செயல்படும். ஏற்கனவே ஹூவேய், டென்செண்ட் நிறுவனங்களும் தங்கள் கருவிகளில் டீப்சீக் AI வசதியை கொண்டு வருவதாக அறிவித்துள்ளன.

News February 28, 2025

கடனை முடிக்கும் போது, இந்த ஆவணத்தை வாங்கிடுங்க!

image

கடனை அடைக்கும் போது, இந்த ஆவணங்களை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள். *அசல் சொத்து ஆவணங்கள் *‘No dues’ சர்டிபிகேட் *Non- Objection சர்டிபிகேட் *Non-Encumbrance சர்டிபிகேட் வில்லங்கமற்ற சான்றிதழ் *கடனை வாங்கும் போது பிந்தைய தேதியிட்ட கொடுத்த காசோலைகள் *கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான ஸ்டேட்மெண்ட் *​​கடனுக்கான சொத்தில் கொடுத்த உரிமையை நீக்குவது *புதுப்பிக்கப்பட்ட கடன் அறிக்கை. SHARE IT.

error: Content is protected !!