News February 28, 2025
அமித்ஷா பேச்சில் நம்பிக்கை இல்லை: சித்தராமையா

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமித்ஷா பேசுவது நம்பகத்தன்மையோடு இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். தென் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமித்ஷா பேசுவதாகவும், பாஜகவை எதிர்ப்பதால், தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் செல்வாக்கை பலவீனப்படுத்த மத்திய அரசு விரும்புகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 28, 2025
EPF வட்டியில் மாற்றமில்லை

2024-25 நிதியாண்டுக்கான வருங்கால வைப்புநிதி (EPFO) வட்டி விகிதம் மாற்றமின்றி 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு 8.15 சதவீதமாக இருந்த EPFO வட்டி, கடந்த ஆண்டு 0.10% உயர்த்தப்பட்டது. 2015-16ஆம் ஆண்டு 8.8 சதவீதமாக இருந்த EPFO வட்டி படிப்படியாக குறைந்து, தற்போது இந்நிலைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 7 கோடி பயனர்கள் இந்த EPFO திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.
News February 28, 2025
காவல்துறை சம்மன்.. நேரம் குறித்த சீமான்

நடிகையின் பாலியல் புகார் தொடர்பான வழக்கில் இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராவதாக சீமான் தெரிவித்துள்ளார். தருமபுரியில் பேசிய அவர், வீட்டில் ஆட்கள் இல்லாதது போல் சம்மனை சுவற்றில் ஒட்டியது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். சீமானின் இந்த பேட்டியைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வளசரவாக்கத்தில் திரள நாம் தமிழர் பலரும் சோஷியல் மீடியாவில் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
News February 28, 2025
இன்னும் மே மாதமே வரல… அதுக்குள்ள பொளக்கும் வெயில்!

நாட்டின் பல இடங்களிலும் இப்போதே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. கடந்த செவ்வாய், டெல்லியில் 32.4 °C, மும்பையில் 38.7 °C வெயில் கொளுத்தியுள்ளது. அந்நகரங்களில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெயில் இதுவே. சென்னையில் 29.05 °C அடித்துள்ளது. நாட்டில் குளிர்காலம் குறைந்து சம்மர் சீசன் நீளும் காலநிலை மாற்றத்தையே இது குறிப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். இப்பவே இப்படினா மே மாசம் எப்படி இருக்க போகிறதோ?