News February 28, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News February 28, 2025
பிரதமரின் டிகிரி சான்றிதழை காட்ட தயார்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை காட்ட தயார் என டில்லி ஐகோர்ட்டில் டில்லி பல்கலை. தெரிவித்துள்ளது. ஆனால், பாதுகாப்பு கருதியும், பிரதமரின் தனிநபர் சுதந்திரம் கருதியும், இந்த தகவல்களை பொதுவெளியில் காட்ட முடியாது எனவும் கூறியுள்ளது. பிரதமர் டிகிரி முடித்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி, மத்திய தகவல் கமிஷனிடம் நீரஜ் என்பவர் சான்றிதழை கோரினார். இதை எதிர்த்து பல்கலை. வழக்கு தொடர்ந்தது.
News February 28, 2025
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு: கவர்னர்

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் கைவிடப்பட்ட கொள்ளைப்புறம் போல் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். தென்மாவட்ட தொழில்முனைவோர், கல்வியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், தொழில்துறைக்கான வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும் மக்களுக்கு அது தரப்படவில்லை என சாடினார். தென்மாவட்ட இளைஞர்களிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்திருப்பதும் கவலையளிக்கிறது என்று கூறினார்.
News February 28, 2025
தங்கம் விலை 3வது நாளாக கடும் வீழ்ச்சி

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. மாதத்தின் கடைசி நாளான இன்று (பிப்.28) சவரனுக்கு ₹400 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹7,960க்கும், சவரன் ₹63,680க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹105க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,05,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை குறைவது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.