News February 28, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 27 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
Similar News
News February 28, 2025
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 10 ஆண்டு சிறை

சேலம், அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள மளிகை கடைக்கு வேலைக்கு சென்ற 17வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த கணேஷ் என்ற வாலிபர் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்றது நடந்தது. அதில், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
News February 28, 2025
ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஆத்துாரில் மாணவிக்கு, 3 மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, 3 பேரை கைது செய்தனர். இவ்விவகாரத்தை மறைத்ததாக, HM முத்துராமன், ஆசிரியை பானுப்ரியா, ஆசிரியர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரைத்தார். அதன்படி முத்துராமன், பானுப்பிரியா பணியிடம் மாற்றப்பட்டனர். ராஜேந்திரன் மீது, ’17பி’ விதிமுறையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News February 28, 2025
சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் (பிப்.28) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1)காலை 9:30 மணி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ரத்ததான முகாம். 2) காலை 10 மணி கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அறிவியல் தினம் கொண்டாட்டம். 3)காலை 10 மணி விவேகானந்தா மருத்துவமனையில் இலவச காது மூக்கு தொண்டை பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.