News February 28, 2025

ராசி பலன்கள் (28.02.2025)

image

மேஷம் – தாமதம், ரிஷபம் – ஆதரவு, மிதுனம் – பாராட்டு, கடகம் – மேன்மை, சிம்மம் – புகழ், கன்னி – பணிவு, துலாம் – வெற்றி, விருச்சிகம் – செலவு, தனுசு – பயம், மகரம் – கவலை, கும்பம் – லாபம், மீனம் – ஆதாயம்.

Similar News

News February 28, 2025

அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு: அரசு

image

மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும் காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.

News February 28, 2025

ஆசிய கோப்பை எப்போது? எங்கே?

image

17ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 ஃபார்மேட்டில் வரும் செப்டம்பரில் தொடங்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆசிய கோப்பை 2025-ஐ நடத்தும் உரிமையை இந்தியா பெற்றுள்ள போதிலும், இந்தப் தொடர் UAE-இல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. அதனால், IND vs PAK போட்டிகள் அங்கேயே நடைபெறும் எனக் கூறப்படுகிறது. 2026 T20 WCக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

News February 28, 2025

லேடி சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் அருண் விஜய்?

image

அருண் விஜய், தற்போது ஹீரோவாக பிஸியாக இருக்க விதை போட்டதே ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவரின் வில்லன் கேரக்டர் தான். சின்ன கேப் விட்டு, அவரை மீண்டும் வில்லனாக்க முயற்சி நடைபெறுகிறதாம். இம்முறை, சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘முக்குத்தி அம்மன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு இருக்கிறார்கள். அவர் பெரிய சம்பளம் கேட்க, இன்னும் உறுதி ஆகவில்லை. நயனுக்கு அருண் விஜய் வில்லன்! காம்போ எப்படி?

error: Content is protected !!