News March 30, 2024
வாயை திறந்தால் பொய் மட்டுமே பேசுகிறார்

வாயை திறந்தால் அண்ணாமலை பொய் மட்டுமே பேசுவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் பேசிய அவர், “சிலர் எப்போதாவது பொய் பேசுவதை பார்த்திருப்போம். ஆனால் பொய் பேசுவதையே தினசரி வாடிக்கையாக அண்ணாமலை வைத்துள்ளார். 5 வயதில் இருந்து நாள் ஒன்றுக்கு 2 புத்தகம் படித்தால் கூட 20 ஆயிரம் புத்தகத்தைப் படித்திருக்க முடியாது. ஆனால், இவர் எப்படி படித்து முடித்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது” எனக் கூறினார்.
Similar News
News January 21, 2026
BREAKING: தங்கம் விலை மீண்டும் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் பெற்று, 22 கேரட் 1 கிராம் தங்கம் மீண்டும் ₹165 உயர்ந்து ₹14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,320 அதிகரித்து ₹1,15,320-க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரே நாளில் 3 மணி நேர இடைவெளியில் சவரனுக்கு ₹4,120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News January 21, 2026
யாரும் எங்களை அணுகவில்லை: பிரேமலதா

கூட்டணிக்காக இந்த நிமிடம் வரை யாரும் தங்களை அணுகவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். மேலும், இன்னும் கூட்டணி குறித்து தாங்கள் முடிவெடுக்கவில்லை எனவும், அதுகுறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். அத்துடன், தற்போது பியூஷ் கோயல் எதற்கு தமிழகம் வந்திருக்கிறார் என்பது கூட தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
BREAKING: விஜய் கட்சிக்கு பொதுச் சின்னம்?

தவெகவின் சின்னம் வெளியாகும்போது உலகமே அதனை உற்றுநோக்கும் என்றும் அக்கட்சியினர் கூறிவந்தனர். இந்நிலையில், தவெகவுக்கு பொதுச் சின்னம் அளிக்க ECI பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தேர்தலில் போட்டியிடாமல் அங்கீகரிக்கப்படாத கட்சியாக தவெக உள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். விசில், மோதிரம் என ஏற்கெனவே பேச்சு எழுந்துள்ள நிலையில், எந்த சின்னம் கொடுத்தால் சரியாக இருக்கும்?


