News February 27, 2025
ஆப்கனில் கனமழை, பனிப்பொழிவு.. 39 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவுக்கு 39 பேர் பலியாகியுள்ளனர். தென்மேற்கு மாகாணமான பாரா உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கடும் பனிப்பொழிவு நேரிட்டது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 240 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 61 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த இயற்கை சீற்றத்துக்கு 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
Similar News
News March 8, 2026
இன்று ஒரு நாள் கொண்டாடி விட்டால் போதுமா..?

இன்று முழுவதும் பெண்களுக்கு வாழ்த்துகள்தான்! ஆனால் சமூகத்தில் அவர்களுக்கு சம உரிமை முழுமையாக வழங்கப்பட்டுவிட்டதா? இன்னும் சில கிராமங்களில் ஆண் குழந்தைகளுக்கே முன்னுரிமை தரும் மனப்போக்கு தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் அரங்கேற போகிறது? வாழ்த்துகளால் அல்ல, சமத்துவத்தால் தான் பெண்கள் தினம் முழுமை பெறும் என்பதை இந்த சமூகம் உணரப்போவது எப்போது?
News March 8, 2026
இன்று பைனல்.. உச்சம் தொட்ட கட்டணம்!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் WC T20I இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதற்காக கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி படையெடுத்துள்ள நிலையில், ஹோட்டல் ரூம் வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு ₹18 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறதாம். அதே போல முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
News March 8, 2026
டாடா கார்கள் விலை ₹47,500 குறைந்தது

கார் வாங்க காத்திருப்போருக்கு மார்ச் ‘CARNIVAL’ என்ற பெயரில் டாடா நிறுவனம் சிறப்பு விலை குறைப்பை அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் புக்கிங் செய்வோருக்கு மட்டுமே இந்த விலை குறைப்பு சலுகை கிடைக்கும் எனவும் டாடா நிறுவனம் அறிவித்துள்ளது. எந்தெந்த கார்கள், எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். வலது பக்கமாக SWIPE செய்து பாருங்கள்.


