News February 27, 2025
கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்து மரணம்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 66 உயிர்களை பலி கொண்ட கள்ளச்சாராய வியாபாரிகள் ஜாமீனில் வெளிவந்து, மீண்டும் காய்ச்சி, தங்கராசு என்பவரைப் பலியிட்டிருக்கிறார்கள். ஜாமீனில் வெளிவந்தவர்கள் துணிச்சலாக கள்ளச்சாராயம் காய்ச்சுகிறார்கள் எனில் CM ஸ்டாலின் கீழ் இயங்கும் போலீசுக்கு தெரியாமல் நடந்து இருக்குமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News March 8, 2026
பிரிட்டனின் உதவி தேவையில்லை: டிரம்ப்

ஈரானுடனான போரில் பிரிட்டனின் ஆதரவு இல்லாததை எப்போது நினைவு கொள்வேன் என டிரம்ப் கூறியுள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அவர், ஒரு காலத்தில் சிறந்த நட்பு நாடான இங்கிலாந்து, இறுதியாக தற்போது 2 விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அனுப்புவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது; ஆனால் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ள ஈரான் போரில், தற்போது கூட்டு சேரும் நபர்கள் தங்களுக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் 8, மாசி 24 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News March 8, 2026
இரண்டு நாளில் கூட்டணி உறுதியாகும்: வீரபாண்டியன்

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – சிபிஐ இடையிலான 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படவில்லை. அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், மார்ச் 8,9-ம் தேதிக்குள் தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான முடிவு அறிவிக்கப்படும் என்றார். தற்போதைய அரசியல் சூழலில், பாஜகவை வீழ்த்துவதே எங்களின் முதன்மையான கடமை என்றும், மீண்டும் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெற செய்யும் எனவும் தெரிவித்தார்.


