News February 27, 2025
வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி ஆலோசனை

<<15597388>>சீமான் <<>>மீது நடிகை அளித்த பாலியல் புகார் விவகாரம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சீமான் வீட்டு காவலாளிக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட காவலாளி கைதாகியுள்ள சூழலில், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து சென்னை நீலாங்கரை வீட்டில், வழக்கறிஞர்களுடன் சீமான் மனைவி கயல்விழி ஆலோசித்து வருகிறார்.
Similar News
News February 28, 2025
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது. முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, டேவிட் நவராவுடன் (செக்குடியரசு) மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 66வது நகர்த்தலில் டேவிட் நவராவுடன் டிரா கண்டார். மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 76வது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானுடன் (செக்குடியரசு) டிரா செய்தார்.
News February 28, 2025
10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.
News February 28, 2025
மார்ச் மாதத்தில் பொது விடுமுறை

மார்ச் மாதத்தில் 2 அரசு பொதுவிடுமுறைகள் வருகிறது. மார்ச் 30-ல் தெலுங்கு வருடப்பிறப்பு ஞாயிறன்று வருவதால், மார்ச் 31-ல் வரும் ரம்ஜான் மட்டுமே கூடுதல் லீவு கிடைக்கும். தவிர, அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 4 அன்று குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ல் ஆண்டு கணக்குமுடிவு நாள் என்பதால், வங்கிகளுக்கு வேலைநாளாக இருக்கும்.