News February 27, 2025
தமிழ்ல எழுதிட்டா அது தமிழ் ஆயிடுமா?

முன்பெல்லாம் ரயில்களுக்கு ‘வைகை exp’, ’பாண்டியன் exp’ என்று பெயரிடுவார்கள். இப்போது பாருங்கள். அந்த்யோதயா, சதாப்தி என்று இந்திப் பெயர்கள்தான் வைக்கப்படுகின்றன. அதேபோல, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ‘ஜன் அவுஷாதி’ என்று ஏதோ புரியாத மொழியிலேயே வருகின்றன. அதேபோல, இந்திப் பெயர்களை தமிழ் எழுத்துக்களால் எழுதினால் அது தமிழாகிவிடுமா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News February 28, 2025
வெளிநாட்டு நிதியுதவியை 90% குறைக்க டிரம்ப் முடிவு

USAID வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90% குறைக்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. USA அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டுகிறார். கடந்த 2023இல் இந்திய மதிப்பில் ₹5.17 லட்சம் கோடி (60 பில்லியன் டாலர்) ஒதுக்கியது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் USAID நிதியை முடக்கினார். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 பேரை நீக்கம் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.
News February 28, 2025
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா மோதிய ஆட்டம் ‘டிரா’ ஆனது. முதல் சுற்றில் பிரக்ஞானந்தா, டேவிட் நவராவுடன் (செக்குடியரசு) மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 66வது நகர்த்தலில் டேவிட் நவராவுடன் டிரா கண்டார். மற்றொரு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 76வது நகர்த்தலில் நுயென் தாய் டாய் வானுடன் (செக்குடியரசு) டிரா செய்தார்.
News February 28, 2025
10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.