News February 27, 2025

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்களா… எச்சரிக்கை

image

சென்னை கோட்டூர்புரத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்யவந்த நபர், வீட்டில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து சிக்கினார். பெங்களூருவில், உணவு டெலிவரி செய்ய சென்ற நபர், கஸ்டமரிடம் (ஆண்) உறவில் ஈடுபடலாமா எனக் கேட்டுள்ளார். இச்சம்பவங்கள் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. ஒருசிலர் தான் தவறு செய்கிறார்கள் என்றாலும், வீட்டில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் ஆலோசனை என்ன?

Similar News

News February 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 192
▶குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
▶பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

News February 28, 2025

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி வெற்றி

image

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோவா வென்றது. 13 அணிகள் இடையிலான 11வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் – கோவா அணிகள் மோதின. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

News February 28, 2025

இன்றைய (பிப். 28) நல்ல நேரம்

image

▶பிப்ரவரி- 28 ▶மாசி – 16 ▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 04:30 PM – 05:30 PM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 AM
▶குளிகை: 07:30 AM- 09:00 PM
▶திதி: பிரதமை ▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம்
▶நட்சத்திரம் : சதயம் ம 3.04

error: Content is protected !!