News February 27, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்கும் வகையில், நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கப்படும். இதற்காக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நகர்ப்புற உள்ளாட்சி, ஊராட்சிகள் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News February 28, 2025
திமுக மொழி அரசியல் செய்யவில்லை: உதயநிதி

அமித்ஷா திமுகவை விமர்சனம் செய்ததை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார்.
தொகுதி வரையறை பற்றி அமித்ஷா கோவையில் பேசியதை, நாடாளுமன்றத்திலும் பேச வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மும்மொழி கொள்கையை வைத்து அரசியல் செய்யவில்லை என்றும், தங்கள் உரிமையை மட்டுமே கேட்பதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
News February 28, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶மதிப்பற்ற மக்கள் உணவுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்; மதிப்புடைய மக்கள் வாழ்வதற்காக மட்டுமே உண்கிறார்கள் ▶உங்களுக்கு எதுவும் தெரியாது என்பதை தெரிந்திருப்பதிலேயே உண்மையான ஞானம் இருக்கிறது▶ஒவ்வொரு நடவடிக்கையும் அதன் மகிழ்ச்சியையும் அதன் விலையையும் கொண்டுள்ளது ▶அனைத்து மனித ஆசிர்வாதங்களில் மரணம் மிக பெரியதாக இருக்கலாம்.
News February 28, 2025
200 இடங்களில் திமுக வெல்லும்: நடிகர் வடிவேலு

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெல்லும் எனவும், 200 இடங்களில் கண்டிப்பாக பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.