News February 27, 2025
மார்ச் முதல் அதிரடி மாற்றம் .. லேட்டா வந்தால் ஆப் சென்ட்

அனைத்து அரசு ஹாஸ்பிடல்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது. அமைச்சர் மா.சு திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, பல இடங்களில் டாக்டர்கள், ஊழியர்கள் இல்லாதது தெரியவந்தது. இந்நிலையில், டாக்டர் – டிரைவர் வரை அனைத்து ஊழியர்களும் மார்ச் முதல் பயோமெட்ரிக் வருகையை பதிவு செய்ய வேண்டும். விடுப்பு, ஆப் சென்ட் போன்ற பணிக்கு வராதவர்களின் விவரங்களை தினமும் காலை 8க்குள் அப்டேட் செய்ய வேண்டுமாம்.
Similar News
News February 28, 2025
200 இடங்களில் திமுக வெல்லும்: நடிகர் வடிவேலு

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெல்லும் எனவும், 200 இடங்களில் கண்டிப்பாக பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News February 28, 2025
மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வென்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய குஜராத், 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் 58 ரன்களும், போப் லிட்ச்பீல்ட் 30 ரன்களும் எடுத்தனர்.
News February 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 192
▶குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
▶பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.