News February 27, 2025

9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு…

image

ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான Key Answer வெளியிடப்பட்டுள்ளது. <>இந்த<<>> இணையதளத்தில் விவரம் அறியலாம்; ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.com என்ற இமெயிலுக்கு மின்னஞ்சல் அனுப்ப, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 9ஆம் வகுப்பு மாணவர்களில், மாவட்டந்தோறும் தலா 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு ₹1,000 என 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

Similar News

News March 11, 2026

BREAKING: மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

image

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் CM ஸ்டாலின், வைகோ முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 4-ல் வெற்றி பெற்றது.

News March 11, 2026

சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வி

image

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. கடும் அமளியை அடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, 18-வது லோக்சபாவில் காங்கிரஸ் MP-க்கள் இதுவரை 157 மணிநேரம் பேசியுள்ளனர். ஆனால், சபாநாயகர் பேசவிடாமல் பாரபட்சம் காட்டுவதாக காங்., குற்றஞ்சாட்டுவதாக அமித்ஷா தெரிவித்தார்.

News March 11, 2026

‘சிலிண்டர் தட்டுப்பாடு’ பயம் வேண்டாம்: PM மோடி

image

கொரோனா பேரிடர் நெருக்கடியை போல சிலிண்டர் தட்டுப்பாட்டில் இருந்து இந்தியா மீளும் என PM மோடி கூறியுள்ளார். மேற்கு ஆசிய போர் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், போரினால் எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.

error: Content is protected !!