News February 27, 2025

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

image

பாளை அருகே உள்ள மேலபாலாமடையை சேர்ந்த ஏசுராஜா  தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு மோட்டாரை அணைக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து  சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 10, 2026

திருநெல்வேலி: மகனை குத்தி கொன்ற தாய்

image

சிவந்திப்பட்டி கலைக் கோவில் நகரைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குடித்து விட்டு மதுபோதையில் வீட்டில் தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாயாண்டியின் தாயார் மகனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிவந்திபட்டி காவல்துறையினர் மகனை கொலை செய்த தாயாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 10, 2026

நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 9, 2026

நெல்லை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <>கிளிக் செ<<>>ய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

error: Content is protected !!