News February 27, 2025
இயக்குநர் அமீர் அக்கவுண்டில் பணம் செலுத்திய ஜாபர் சாதிக்

போதைப்பொருள் விற்று சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜாமின் மனு மீது சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டிய ED, அவருக்கு ஜாமின் தந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 28, 2025
தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.1,755 கோடி செலவிட்ட பாஜக

2023-24 பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.1,755 கோடி செலவிட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ரூ.619 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.107 கோடியை செலவிட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேபோல், பாஜக, காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளுக்கு ரூ. 2669.86 நன்கொடை கிடைத்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
News February 28, 2025
பள்ளிகளில் சாதிப்பெயர் நீக்கம்.. அரசுக்கு ஐகோர்ட் கெடு

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
News February 28, 2025
ராசி பலன்கள் (28.02.2025)

மேஷம் – தாமதம், ரிஷபம் – ஆதரவு, மிதுனம் – பாராட்டு, கடகம் – மேன்மை, சிம்மம் – புகழ், கன்னி – பணிவு, துலாம் – வெற்றி, விருச்சிகம் – செலவு, தனுசு – பயம், மகரம் – கவலை, கும்பம் – லாபம், மீனம் – ஆதாயம்.