News February 27, 2025
ரீ–ரிலீஸாகும் ரவி மோகன் படங்கள்

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரவி மோகன். தற்போது திரைத்துறையில் கால்பதித்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் வகையில் அவர் நடித்த முதல் படமான ஜெயம், M.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படங்கள் விரைவில் ரீ–ரிலீஸ் ஆகவுள்ளன. இந்த திரைப்படங்கள் 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தியேட்டர்களில் ரீ –ரிலீஸாகின்றன. இதனால் ரவியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Similar News
News February 28, 2025
TNSET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

மாநில தகுதித் தேர்வு (TNSET) மார்ச் 6, 7, 8 ஆகிய தேதிகளில் கணினி (CBT) வழியில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் trb.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கு நெட் (NET) அல்லது செட் (SET) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். செட் எனப்படும் மாநில அளவிலான தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
News February 28, 2025
தேர்தல் பிரசாரத்துக்கு ரூ.1,755 கோடி செலவிட்ட பாஜக

2023-24 பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு பாஜக ரூ.1,755 கோடி செலவிட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ரூ.619 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.107 கோடியை செலவிட்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேபோல், பாஜக, காங்கிரஸ், சிபிஎம், ஆம் ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளுக்கு ரூ. 2669.86 நன்கொடை கிடைத்து இருப்பதாகவும் கூறியுள்ளது.
News February 28, 2025
பள்ளிகளில் சாதிப்பெயர் நீக்கம்.. அரசுக்கு ஐகோர்ட் கெடு

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம்? எனவும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.