News February 27, 2025
மலையாள படத்தில் தமிழ் வில்லனாக நடிக்கும் டிஜே

பிரித்விராஜ் நடிக்கும் ‘விலயத் புத்தா’ படத்தின் மூலம் அசுரன் புகழ் டிஜே அருணாச்சலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். மலையாளம் தெரியாது என்பதால், முதலில் அப்படத்தில் நடிக்க தயங்கியதாகவும், ஆனால் வில்லனாக நடிக்கும் ‘மாரி’ கேரக்டருக்கு அதிக மலையாளம் தேவையில்லை எனக் கூறியதால் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வசனங்கள் பெரும்பாலும் தமிழிலேயே இருந்ததாகவும் கூறியுள்ளார்.
Similar News
News March 5, 2026
விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
News March 5, 2026
BREAKING: கூட்டணி.. இபிஎஸ் புதிய அறிவிப்பால் பரபரப்பு

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி இறுதி வடிவம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கட்சியின் மா.செ., கூட்டத்தில் EPS அறிவித்துள்ளார். எனவே, தேர்தல் பணிகளை முடுக்கிவிடும்படி அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். திமுகவும் தொகுதிப் பங்கீட்டை கிட்டத்தட்ட இறுதி செய்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.


