News February 27, 2025

குமரி குளங்களில் வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்!

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், குமரி மாவட்ட குளங்களில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுப்பதற்கு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். விவசாய தேவைகளுக்காக ஓர் ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 73 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கன மீட்டரும் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 8, 2026

குமரி: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

image

கன்னியாகுமரி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News April 8, 2026

குமரி: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

குமரி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.

1. இலவச மருத்துவ பரிசோதனை

2. அவசர சிகிச்சை

3. மருந்துகள்

4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்

5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்

6. குழந்தை தடுப்பூசி

7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04652-275089 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

News April 8, 2026

குமரி வரும் தவெக தலைவர் விஜய்

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரை செய்வதற்காக ஏப்.,12ம் தேதி கன்னியாகுமரி வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்.

error: Content is protected !!