News February 27, 2025

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு உள்ளிட்ட மண்டலங்களில் மொத்தம் 457 ‘அப்ரென்டிஸ்’ பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 32 இடங்கள் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு <>iocl.com என்ற இனையத்தை<<>> அனுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 30, 2025

செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர் கோவில்

image

பேராவூரணி அருகே விளங்குளத்தில் அட்சயபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சாமிக்கு விளக்கு ஏற்றி, சிறப்பு அபிஷேகம் செய்தால் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும் இங்கு அட்சய திரிதியை நாளில் வேண்டினால் செல்வம் செழிக்கும், நீண்ட ஆயுள் பெருகும், கல்வி போன்றவற்றில் சிறக்கலாம் என்பது நம்பிக்கையாகும். அட்சய திரிதியை நாளில் உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் SHARE பண்ணுங்க

News April 30, 2025

சாலை விபத்தில் தொழிலாளி பலி

image

ராமகவுண்டம்பட்டி வடக்கிபட்டியைச் சேர்ந்தவர் அழகன், தொழிலாளியான இவர், மதுரை-திருச்சி நெடுஞ்சாலையில் ராமகவுண்டம்பட்டி அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதியதில் அழகன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அழகன் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 29, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 29-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 டயல் அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!