News March 30, 2024
அமெரிக்காவுக்கு குடியரசு துணைத் தலைவர் பதிலடி

கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, ஜெர்மனி, ஐநாவுக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசுகையில் “வலுவான நீதித்துறையை கொண்ட ஜனநாயக நாடு இந்தியா. தனிநபரோ, ஒரு குழுவோ, அதில் பாதிப்பு ஏற்படுத்த முடியாது. ஆதலால் சட்டத்தின் ஆட்சி குறித்து யாருடைய பாடமும் இந்தியாவுக்கு தேவையில்லை” என பதிலடி கொடுத்துள்ளார்.
Similar News
News October 30, 2025
அதிமுகவுக்கு இதுதான் வாடிக்கை: சேகர்பாபு

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, எவையெல்லாம் தமிழகத்திற்கு உகந்ததாக இல்லையோ, அதையெல்லாம் வரவேற்பதுதான் அதிமுகவின் வாடிக்கையாக உள்ளது என விமர்சித்தார். திமுகவின் திராவிட மாடல் ஆட்சியை எப்போதும் இகழும் பணியிலேயே அதிமுக, பாஜக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News October 30, 2025
திருப்பதி சால்வை கொள்முதலில் முறைகேடா?

திருப்பதி கோயிலுக்கு வரும் VVIP-களுக்கு சால்வை அணிவிப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த சால்வை கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ₹400 மதிப்புள்ள சால்வையை ₹1,300-க்கு வாங்கியதாக கணக்கு காட்டி, ₹50 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக புலனாய்வு விசாரணை நடத்த, கோயில் அறங்காவலர் குழு உத்தரவிட்டுள்ளது.
News October 30, 2025
விஜய்யுடன் கூட்டணி… முடிவை அறிவித்தார்

கரூர் துயருக்கு பிறகு, அதிமுக, பாஜக கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், NDA-வில் விஜய் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்யை NDA-வில் இணைப்பது குறித்து, கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் NDA கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார். இது விஜய்யுடனான கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளதாகவே தெரிகிறது.


