News February 27, 2025
கிராமத்து இயக்குநருடன் கைகோர்த்த SaNa

‘வம்சம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படங்களை இயக்கிய பாண்டியராஜ், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியராஜ் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா, டி.இமான் ஆகிய இசையமைப்பாளர்களுடனே பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News February 27, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர், மனைவி மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜென் ஹேக்மேன், மனைவி பெட்ஸி ஆரகவா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோவில் உள்ள வீட்டில் 2 பேரும் சடலமாக கிடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பேர் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. பிரெஞ்ச் கனெக்சன், நைட் மூவ்ஸ், சூப்பர் மேன் உள்ளிட்ட படங்களில் ஹேக்மேன் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக 2 ஆஸ்கர், 3 கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளார்.
News February 27, 2025
இயக்குநர் அமீர் அக்கவுண்டில் பணம் செலுத்திய ஜாபர் சாதிக்

போதைப்பொருள் விற்று சம்பாதித்த பணத்தை இயக்குநர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜாமின் மனு மீது சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டிய ED, அவருக்கு ஜாமின் தந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளது.
News February 27, 2025
கொலை செய்துவிட்டு ரீல்ஸ்: ஷாக்கான போலீஸ்

சென்னையில் கொலை செய்துவிட்டு, அதை இன்ஸ்டாகிராமில் ரீல் பதிவிட்டு கொண்டாடியவர்களால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்ணாநகரில் சின்ன ராபர்ட் என்பவரை கொன்றுவிட்டு, அயனாவரத்தில் ரேவதி என்ற பெண்ணையும் கொல்ல முயன்றிருக்கிறது. பின்னர் அந்த கும்பல், கொலை செய்ததை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டாடி இருக்கிறது. இதைப் பார்த்த போலீஸ், அவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்திருக்கிறது.