News February 27, 2025

PAK வீரரின் கேவலமான செயல்: யுவராஜ் சிங் தந்தை சாடல்

image

PAK பவுலர் ஷகீன் அஃப்ரிடி கேவலமாக நடந்து கொண்டதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் சாடியுள்ளார். CTயில் IND vs PAK போட்டியின் போது, 41ஆவது ஓவர் முடிவில் IND வெல்ல 17 ரன்களும், கோலி சதமடிக்க 13 ரன்களும் தேவைப்பட்டது. 42ஆவது ஓவரை வீச வந்த அஃப்ரிடி, கோலி சதமடிக்க கூடாது என்பதற்காக அந்த ஓவரில் 3 Wideகளை வீசியதாகவும், இது அவரது கேவலமான மனநிலையைக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Similar News

News February 27, 2025

சீமான் கைதாக வாய்ப்பு?

image

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் நோட்டீஸில், நடிகை அளித்த புகாரில், ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும், சீமான் ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவரது வீட்டிற்கு கூடுதல் போலீசார் தற்போது வரவழைக்கப்பட்டுள்ளனர். நீலாங்கரை பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் சீமான் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News February 27, 2025

புகை பிடிக்காதவர்களுக்கு அலர்ட்

image

புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அனைவரும் அறிவோம். ஆனால், புகை பிடிக்காதவர்களும் அதேபோன்ற ஆபத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் வாழ்பவர்களின் மூச்சுக்காற்றில் நச்சுக் காற்று, ஆஸ்பெட்டாஸ், வாகன புகை, சிலிகா துகள்கள் ஆகியவை இருப்பதால், அவை கூட புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று தெரியவந்துள்ளது.

News February 27, 2025

சீமானுடன் இப்படி ஒரு தொடர்பா?

image

சீமான் வீட்டுக் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் யார் தெரியுமா? 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது, அவருடன் இறந்த 16 பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அவரது மகன்தான் இந்த பிரவீன் ராஜேஷ். ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று சீமான் பேசியிருந்த நிலையில், அவரது வழக்கில் இப்படி ஒரு வித்தியாசமான கனெக்‌ஷன் உள்ளது.

error: Content is protected !!