News February 27, 2025
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம், நாளை (பிப்.28) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த குறைதீர் கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாகவும் நேரடியாகவும் தெரிவித்து பயன் பெறுங்கள் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
Similar News
News April 21, 2025
திருவள்ளூரில் வாட்டி வதைக்கும் வெயில்

திருவள்ளூரில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
News April 21, 2025
முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது

“தொழில் வளா்ச்சியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் மப்பேடு, ஸ்ரீபெரும்புதூா், சுங்குவாா்சத்திரம், இருங்கக்கோட்டை தொழிற்சாலைகள் தான். ஒரு பெரிய இடத்தில் தொழிற்சாலைகள் கட்டப்படும்போது, அங்குள்ள இடத்தில் 10% சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மரங்கள் நட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முன்மாதிரி மாவட்டமாக திருவள்ளூா் விளங்குகிறது” என ஆட்சியா் பிரதாப் பெருமிதம் கொண்டார். மாவட்டத்தின் பெருமையை ஷேர் பண்ணுங்க