News February 27, 2025

 திருமணம் ஆகாதவிரக்தி வாலிபர் தற்கொலை

image

பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி காலனியைக் சேர்ந்தவர் உதயகுமார்(22) இவர் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பல இடங்களில் பெண் பார்த்தும் தனக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.

Similar News

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் <>மார்ச் 5ம் தேதிக்குள் <<>>விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

பயிர் காப்பீட்டில் ரூ.5,148 கோடி நிவாரணம்: பன்னீர்செல்வம்

image

சேலத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், “கடந்த மூன்றரை ஆண்டுகளில் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5,148 கோடி நிவாரண உதவித்தொகையாக எவ்வித நிலுவையும் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே விளையும் சிறப்பு வாய்ந்த 30 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

News February 27, 2025

2,000 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை

image

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, ஆத்தூர், இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, மேச்சேரி, வாழப்பாடி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட 13 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்ட வேளாண்மை (ம) வேளாண் வணிகம் துறை சார்பில் உழவர் சந்தைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் 2,000 விவசாயிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!