News March 30, 2024
விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு கொண்டம்பட்டி பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜெய்ஷித்தல் முண்டே, ரிஷிகேஷ் ரமேஸ்வரர் குட்டே படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் டீ குடிப்பதற்காக வெளியே சென்று விட்டு பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் பைக்கில் வந்து கொண்டு இருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பேர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர்.
Similar News
News November 18, 2025
தொண்டாமுத்தூர்: திமுக நிர்வாகிகள் 9 பேர் விடுதலை!

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றி கருணாநிதியின் புகைப்படம் வைத்ததால் ஏற்பட்ட சர்ச்சையில், அதிமுக நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கோவை மாவட்ட கூடுதல் 4-ஆம் நீதிமன்றம், திமுக நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

கோவையில் வசமாக சிக்கிய இளம்பெண்!

கோவையில் தடாகம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் தடாகத்தை சேர்ந்த மரியாமோல் என்கிற கலைசசெல்வி பணிபுரிந்து வந்தார்.இவரை சில மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர்.இந்நிலையில் வாடிக்கையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பெற்றதாகவும், லேப்டாப், ஸ்கூட்டர், செல்போனை தராமல் ஏமாற்றி வந்த்தாகவும் புகார் வந்துள்ளது. விசாரணை மேற்கொண்ட சாய்பாபா காலனி போலீசார் கலைச்செல்வியை நேற்று கைது செய்தனர்