News February 27, 2025
சாம்பியன்ஸ் டிராபி: PAK Vs BAN இன்று மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் – வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதனால் தொடரில் இருந்து பாகிஸ்தான், வங்காளதேசம் வெளியேறிய நிலையில், தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று களம் காண்கின்றன. இரு அணிகளும் தங்களது முதல் வெற்றிக்காக போராடும்.
Similar News
News March 13, 2026
நெருங்கும் தேர்தல்.. திமுக முக்கிய முன்னெடுப்பு

மார்ச் 15-ல் திமுக மா.செ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் பேரவை <<19359637>>தேர்தல் தேதி<<>> அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால், தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும், பரப்புரை திட்டங்களை வகுக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.
News March 13, 2026
அபிஷேக் போல பந்த் மாறுவாரா?

கடந்த IPL-ல் LSG கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் சிரமப்பட்டார். இதை சரிசெய்ய யுவராஜிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் 4 நாட்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி நடந்ததாக தகவல். இதற்குமுன் அபிஷேக், கில் போன்ற இளம்வீரர்களை யுவராஜ் உருவாக்கியுள்ளார். அதேபோல் பந்த், மேலும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
News March 13, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $64 (இந்திய மதிப்பில் ₹5,913) குறைந்து $5,108 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலை 1 அவுன்ஸ் $0.44 குறைந்து $84 ஆக நீடிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.


