News February 27, 2025
விஜயலட்சுமி புகார்: சீமான் நேரில் ஆஜராக மாட்டார்?

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராக அவருக்கு நேற்று முன்தினம் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 27, 2025
ஃபைனலில் INDஐ வீழ்த்துவோம்.. இப்போ என்ன ஆச்சு?

CTயில் இருந்து ENG வெளியேறியதால், அந்த அணி வீரர் பென் டக்கெட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். சமீபத்தில் முடிந்த INDக்கு எதிரான ODI தொடரில், தொடர்ந்து 2 போட்டிகளில் ENG தோற்றது. அப்போது, அனைத்து போட்டிகளிலும் தோற்றாலும் அது மேட்டர் இல்லை, CTக்காகவே இங்கு வந்திருக்கிறோம், CT ஃபைனலில் INDஐ வெல்வோம் என டக்கெட் கூறியிருந்தார். ஆனால், செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் ENG வெளியேறியுள்ளது.
News February 27, 2025
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சிக்கும் செக்?

வங்கதேசத்தில் ஹஸீனாவின் ஆட்சி கலைப்புக்கு காரணமான மாணவ அமைப்பின் தலைவர் நஹித் இஸ்லாம், இடைக்கால அரசுக்கு நெருக்கடியை தந்திருக்கிறார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள அவர் நாளை புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆளும் இடைக்கால அரசு மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதே தனது முடிவுக்கு காரணம் என்றும் கூறியுள்ளார். வங்கதேசத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ?
News February 27, 2025
2 நாளில் சவரனுக்கு ₹520 குறைந்த தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2ஆவது நாளாக சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து ஏற்றத்திலிருந்த தங்கத்தின் விலை புதிய உச்சமாக கடந்த 25ஆம் தேதி ₹64,600க்கு விற்பனையானது. நேற்று (பிப்.26) சவரனுக்கு ₹200 குறைந்த நிலையில், இன்று (பிப்.27) ₹320 குறைந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இந்த வாரத்தில் கிராமுக்கு ₹3 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.