News February 27, 2025

பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்

image

கெட் அவுட் என்று கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோரை தான் பாராட்டுவதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். அவரது மொழியை கெட் அவுட் என்று சொல்ல அவருக்கு மனதில்லை, அதுபோல நம் மொழியை விட்டுக்கொடுக்க நமக்கு மனமில்லை எனவும் தெரிவித்தார். இந்த சண்டை தவிர்க்க முடியாத போர் என்றும், இதில் வென்று மொழியை காக்கும் வரையிலும் சண்டை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.

Similar News

News March 7, 2026

வேட்புமனுவை வாபஸ் வாங்கினார் சௌமியா

image

அன்புமணி ராஜ்யசபா எம்பியாக தேர்வாகவுள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அன்புமணிக்கு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை வாபஸ் வாங்கிய சௌமியா, தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 7, 2026

ஈரான் போர்.. இந்தியாவில் இதன் விலை குறைகிறது

image

இந்தியாவில் விளையும் பாஸ்மதி அரிசியில் 72% மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தற்போது அங்கே போர்ச்சூழல் நிலவுவதால் 2 லட்சம் டன் பாஸ்மதி அரிசியின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலிருந்து கப்பல்களில் கொண்டுசெல்லப்பட்ட மேலும் 2 லட்சம் டன் அரிசியும் பாதிவழியிலேயே நிற்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவில் அதன் விலை 7% வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் குறையலாம்.

News March 7, 2026

விலை உயராது.. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹114.50-ம், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ₹60-ம் உயர்ந்தது. சிலிண்டர் உயர்வால், டீ, காபி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், டீ, காபிகளின் விலை உயராது என்று பெருநகர டீக்​கடை உரிமை​யாளர்​கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!