News February 27, 2025
உ.பி. வாரியர்சை வீழ்த்திய மும்பை அணி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி. வாரியர்சை மும்பை அணி வென்றது. முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்கள் எடுத்தார். 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ஸ்கிவர்-ப்ரண்ட் 75 ரன்கள் எடுத்தார்.
Similar News
News February 27, 2025
கிராமத்து இயக்குநருடன் கைகோர்த்த SaNa

‘வம்சம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படங்களை இயக்கிய பாண்டியராஜ், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியராஜ் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா, டி.இமான் ஆகிய இசையமைப்பாளர்களுடனே பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
News February 27, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.27) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,010க்கும், சவரன் ₹64,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹106க்கும், 1 கிலோ ₹1,06,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் நேற்று சவரனுக்கு ₹200 குறைந்திருந்த நிலையில், 2வது நாளாக சரிவடைந்திருப்பது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News February 27, 2025
தமிழகத்தில் எண்ணெய்: மத்திய அரசின் அடுத்த திட்டம்

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதனால் கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படும் என சமூக செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு என்றாலே பிரச்னையை உருவாக்க மத்திய அரசு திட்டம் போடுகிறதா? இல்லை அதன் திட்டங்கள் பிரச்னையை உருவாக்குகிறதா? உங்கள் கருத்து என்ன?