News February 27, 2025
மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற தாய்

தொடுகாடு கிராமத்தில், கிருஷ்ணமூர்த்தி (27) வேலைவாய்ப்பின்றி தாய் ஜெயந்தியிடம் தொடர்ந்து பணம் கேட்டு தகராறாக மிரட்டினார். பணம் தர முடியாது என்ற தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஜெயந்தி கிருஷ்ணமூர்த்திக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்தார். காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மப்பேடு போலீசில் புகாரின் பேரில் ஜெயந்தி கைது செய்யப்பட்டார்.
Similar News
News March 4, 2026
திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.58,514 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News March 4, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

ஊத்துக்கோட்டை சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட், திருத்தணி – அரக்கோணம் சாலையில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் இன்று(மார்ச் 4) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது. வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மட்டுமே இயக்கப்படுமென மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
கும்மிடிப்பூண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(26). தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று(மார்ச் 3) கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறிய பிரசாந்த், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


