News February 27, 2025
ராசி பலன்கள் (27.02.2025)

மேஷம் – செலவு, ரிஷபம் – முயற்சி, மிதுனம் – புகழ், கடகம் – அலைச்சல், சிம்மம் – சிக்கல், கன்னி – சினம், துலாம் – பரிசு, விருச்சிகம் – சிந்தனை, தனுசு – கவனம், மகரம் – தடங்கல், கும்பம் – பக்தி, மீனம் – ஓய்வு.
Similar News
News February 27, 2025
மகா கும்பமேளா நிறைவு: 68 கோடி பக்தர்கள் நீராடினர்

உ.பி பிரயாக்ராஜ் நகரில் 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது. கடந்த மாதம் 13ஆம் தேதி பவுர்ணமி தினத்தன்று தொடங்கிய மகா கும்பமேளாவில், இதுவரை 68 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். மகா கும்பமேளா இனி 2169ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
News February 27, 2025
ஈஷாவில் களைகட்டிய மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, நடிகர்கள் சந்தானம், நடிகை தமன்னா, விஜய் வர்மா, ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
News February 27, 2025
ஓ.டி.டி தளத்தில் லக்கி பாஸ்கர் சாதனை

ஓ.டி.டி தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் புதிய சாதனைய படைத்துள்ளது. ஓ.டி.டி.யில் வெளியாகி 13 வாரங்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. நவ. 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.