News February 26, 2025
எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் இன்று சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் புகார்களை விரைந்து முடிக்க ஆலோசனை செய்யப்பட்டது.
Similar News
News September 29, 2025
தென்காசி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
News September 29, 2025
தென்காசி: மீண்டும் ஒற்றை யானை வருகை!

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான செங்கோட்டை தாலுகா வடகரை பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளன. தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அவ்வப்போது சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஒற்றை யானை ஒன்று நேற்று இரவு மீண்டும் தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திய யானையை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
News September 29, 2025
தென்காசி: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <