News March 30, 2024
வேலூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்து

பள்ளிகொண்டா அடுத்த வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (55), இவர் நேற்று கூத்தம்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி எதிர்பாராதவிதமாக இவரது பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 5, 2025
வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.*
News November 4, 2025
பள்ளிகொண்டா வீடு வீடாக படிவங்களை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ.4) பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்காக படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
News November 4, 2025
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறப்பு!

வேலூர்: வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இலவச தொலைபேசியில் 1950 என்ற எண்ணுக்கு காலை 10.00 மணிமுதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் தொகுதி வாரியாக படத்தில் உள்ள தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


