News February 26, 2025
பாஜக என்றால் விஜய் பதுங்குவது ஏன்? CPM

தவெக 2ஆம் ஆண்டு விழாவில் மத்திய பாஜகவை விஜய் சீண்டவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதுகுறித்து CPM மாநிலச் செயலாளர் சண்முகம், பாஜக அரசு குறித்து விஜய் பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், பாசிசம் பயங்கரமானது, ஆனால் பாயாசம் சுவையானது என கிண்டலடித்த அவர், ஹிட்லர், முசோலினி வரலாறுகளை விஜய் படிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
Similar News
News March 14, 2026
தோனிக்கு பதில் சஞ்சு கீப்பிங் செய்ய வேண்டும்: ரெய்னா

இந்தாண்டுக்கான IPL சீசனில் தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்படுவது CSK-வுக்கு நல்லது என்று Ex வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதேபோல், சஞ்சுவை தொடக்க வீரராக இல்லாமல் 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும். ருதுராஜ் & ஆயுஷ் மாத்ரேவை ஓபனிங் ஜோடியாகவும், பிரெவிஸ் & ஷிவம் துபேவை 4-வது, 5-வது இடத்திலும் இறக்க வேண்டுமென்றும் ஆலோசனை கூறியுள்ளார்.
News March 14, 2026
CINEMA 360°: SK-வின் ஜோடியாகும் பாக்யஸ்ரீ போர்ஸ்

*பவன் கல்யாணின் ‘உஸ்தாத் பகத் சிங்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது *தனுஷின் ‘கர’ பட பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகியுள்ளது *சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர் மார்ச் 16-ல் வெளியாகும் என அறிவிப்பு *’தாய் கிழவி’ சிவகுமார் முருகேசன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல் *அனுபமாவின் ‘லாக்டவுன்’ அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் ஆகிறது
News March 14, 2026
கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால், அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக TN அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை இம்மாதம் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE


