News February 26, 2025
விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

தவெக 2ஆம் ஆண்டு விழாவில் பவுன்சர்களால் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், சோஷியல் மீடியாவிலும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இந்த தாக்குதல் சம்பவத்திற்கு விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையில், தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் திமுகவின் ஆதரவாளர் என தவெகவினர் மேலே இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.
Similar News
News February 27, 2025
மகளிர் பிரீமியர் லீக்: டெல்லி அணி அபாரம்

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. முதலில் களமிறங்கிய குஜராத் 20 ஓவர்கள் 127/9 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பாரதி ஃபுல்மாலி 40 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய டெல்லி, 15.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது வெற்றிபெற்றது. அந்த அணியின் ஜெஸ் ஜோனாசென் 61 ரன்களும், ஷபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தனர்.
News February 27, 2025
மகா கும்பமேளா: மம்தா பானர்ஜி சந்தேகம்

144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மகா கும்பமேளா 2025இல் கொண்டாடுவதன் துல்லியத் தன்மை குறித்து நிபுணர்கள் சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2013இல் கும்பமேளா நடைபெற்ற நிலையில் தற்போது மகா கும்பமேளா நடத்தப்படுவது சரியானதா என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 191
▶குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
▶பொருள்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.