News February 26, 2025
மகா சிவராத்திரி: கண் விழித்தே ஆக வேண்டிய ராசிகள்

சிவபெருமானுக்கு கொண்டாடப்படக் கூடிய முக்கியமான விழாக்களில் மகா சிவராத்திரி முதன்மையானதாகும். அனைத்து ராசிக்காரர்களும் இந்நாளில் இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். குறிப்பாக, சனியின் பார்வையில் வரக்கூடிய ராசிகள் இந்நாளில் விழித்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதன்படி, மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம், ஜென்ம சனிக்குள் நுழையப்போகும் மீன ராசிக்காரர்கள் கட்டாயம் விழிக்க வேண்டும்.
Similar News
News February 27, 2025
இறுதிப் போட்டியில் IND Vs AUS மோதும்: டேனியல் கிறிஸ்டியன்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா விளையாட அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு முன்னாள் வீரர் டேனியல் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் AUS அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும், முன்னணி வீரர்கள் இல்லாமலும் அணி சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார். AUS அணியின் உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 27, 2025
இன்றைய (பிப். 27) நல்ல நேரம்

▶பிப்ரவரி- 27 ▶மாசி – 15 ▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 01:30 PM- 03:00 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM- 10:30 AM
▶திதி: அமாவாசை ▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம் ▶சந்திராஷ்டமம்: பூசம்
▶நட்சத்திரம்: அவிட்டம் மா 4.07
News February 27, 2025
மத்திய அரசின் வாதம் தவறானது: அன்புமணி

மும்மொழி கொள்கையினை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி தரமாட்டோம் என மத்திய அரசு கூறுவது தவறு என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கல்வி என்பது மாநில அரசின் உரிமை, அதில் மத்திய அரசு இடையூறு செய்யக்கூடாது என்பதே பாமகவின் நிலைபாடு என்றும் கூறியுள்ளார். 45 ஆண்டுக்கு முன் கல்வி மாநில பட்டியலில் இருந்ததாகவும், எமர்ஜென்சி காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.