News February 26, 2025
பேருந்து மீது கார் மோதல்- 2 பேருக்கு காயம்!

சேலம் மாவட்டம், தலைவாசல் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு டவுன் பேருந்து பின்புறம், கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு!
Similar News
News September 12, 2025
2640 வெற்றியாளர்கள் ரூபாய் 42.08 லட்சம் பரிசு!

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி அறிக்கையில்; கடந்த மாதம் நடைபெற்ற முதல்வர் கோப்பை காண பரிசு போட்டியில் 5 பிரிவுகளில் 15 விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இதில் 54,157 பேர் பங்கு பெற்று தங்களது விளையாட்டு திறமையை வெளிப்படுத்தினர். இவர்களில் 4208 பேர் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர். அவர்களுக்கு மொத்தம் ரூபாய் 42.08 லட்சம் பரிசு வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
News September 12, 2025
சேலம்; பொது இடங்களில் பயன்படுத்தக் கூடாது!

சேலம் மாவட்ட காவல்துறையின் குற்ற புலனாய்வு பிரிவு காவல் துறை கைபேசி இணையதளம் பயன்படுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் பொது இடங்களில் செல்போனில் வைஃபை பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை செய்யக்கூடாது. இதனால் சைபர் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்று எச்சரித்துள்ளனர். சைபர் குற்றங்களுக்கு 1930 அழைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
News September 12, 2025
சாலை விதிகளை கடைபிடிப்பீர். காவல் துறை எச்சரிக்கை

சேலம் மாநகர காவல் போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை பொதுமக்கள் ஓட்ட வேண்டும், அதிவேகம் ஆபத்தாக முடியும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாதுகாப்பாக பயணம் செய்து நல்ல முறையில் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.