News February 26, 2025
‘ஹிந்தி’யை பயன்படுத்தாத விஜய்

தவெகவின் 2ம் ஆண்டு விழாவில் உரையாற்றிய விஜய் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பேசினார். மத்திய, மாநில அரசுகள் சண்டை போடுவது போல நடித்து மக்களுடன் விளையாடுவதாக சாடினார். வேற்று மொழியை திணித்தால் நிச்சயம் ஏற்கவே முடியாது என கூறிய விஜய், ஒரு இடத்தில் கூட ஹிந்தி என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. வார்த்தைக்கு கூட பயன்படுத்தக்கூடாது என நினைத்தாரோ என்னவோ? கமெண்ட் பதிவு செய்யுங்கள்.
Similar News
News March 12, 2026
CINEMA 360: அரசியலுக்கு வரும் அஜித்?

*இஸ்ரேல் – ஈரான் போர், கேஸ் தட்டுப்பாடு போன்றவற்றை சரியாக கணித்த ஜோதிடர், நடிகர் அஜித் 2031-ம் ஆண்டு அரசியலுக்கு வருவார் என பதிவிட்டிருப்பது வைரலாகியுள்ளது *‘LIK’ படம், ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது *நயன்தாராவின் ‘ஹாய்’ படம் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகலாம் * பிரியங்கா மோகன் நடித்துள்ள Made in korea படம் Netflix OTT-ல் வெளியாகியுள்ளது.
News March 12, 2026
இந்திய கப்பல்களுக்கு அனுமதியா? ஈரான் மறுப்பு

ஹார்முஸ் வழியாக புறப்பட்ட முதல் <<19360931>>எண்ணெய் கப்பல்<<>>(SHENLONG) மும்பையை அடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இனி பிரச்னை படிப்படியாகும் குறையும் என பெருமூச்சு விடுவதற்குள் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது ஈரான். அதாவது, ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய சரக்கு கப்பல்கள் செல்ல எந்த அனுமதியும் வழங்கவில்லை என ஈரான் மறுத்ததாக ஊடங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
News March 12, 2026
அக்சரிடம் மன்னிப்பு கேட்டேன்: சூர்யகுமார்

T20 WC சூப்பர் 8 சுற்றில் SA-க்கு எதிரான போட்டியில் அக்சர் படேலை அணியில் சேர்க்காததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டதாக சூர்யகுமார் தெரிவித்தார். அதற்காக அக்சர் தன்னிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக அக்சர் விளையாடாத நிலையில், SA-க்கு எதிரான போட்டியில் அவருக்கு பதிலாக வாஷிங்டன் விளையாடினார். அதில் இந்தியா தோல்வி அடைந்தது.


