News February 26, 2025
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை

புதுவை பள்ளிக்கல்வி துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் நேற்று (பிப்.25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதுவை, காரைக்காலில் 363 ஆசிரியர்களும், மாகியில் 39 ஆசிரியர்களும், ஏனாமில் 12 ஆசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 31, 2025
புதுச்சேரியில் இன்று மதுபான கடைகள் மூடல்

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் இன்று மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் உத்தரவிட்டுள்ளார். ஊா்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நலன்கருதி இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊா்வலம் காமராஜா் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி எஸ்.வி.பட்டேல் சாலை,வழியாக கடற்கரை சாலைக்குச் செல்கிறது.
News August 31, 2025
புதுவை மக்களுக்கு சீனியர் எஸ்.பி எச்சரிக்கை

புதுச்சேரி மக்களுக்கு சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுதுள்ளார். அதில், ஆன்லைனில் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி, வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால், அதனை நம்பி தர வேண்டாம் எனவும், அதனை மீறி அவர்களிடம் வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை கொடுத்து அதன் மூலம் சைபர் மோசடி நடந்ததால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
News August 31, 2025
புதுவை மக்களே.. ஆதார் கார்டை நீங்களே புதுப்பிக்கலாம்!

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம்.!
▶️முதலில் <
▶️அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
▶️அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும்.
▶️முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்.
▶️பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.(SHARE பண்ணுங்க)