News February 26, 2025

PF வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்

image

EPFO வட்டியை 8.35% ஆக உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை வட்டி விகிதத்தை உயர்த்தினால் ஊழியர்கள் நிம்மதி அடைவர். மோடி ஆட்சியில் EPFO தொடர்ந்து 2 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2023-24ஆம் ஆண்டில் PF வட்டி விகிதம் 8.25% ஆக உயர்த்தியது கவனிக்கத்தக்கது.

Similar News

News February 27, 2025

தாய் மொழியை காக்க போராடும் மாநிலங்கள்

image

பஞ்சாப் மாநிலத்தில் CBSE உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் தெலங்கானாவில் அனைத்துப் பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு தீவிரமாக அமல்படுத்தி வரும் நிலையில், மாநில அரசுகள் தங்கள் மாநில மொழியை கட்டாயமாக்கி வருகின்றன.

News February 26, 2025

ஏன் புதிய பென்ஷன் திட்டம்?

image

நாட்டில் அரசு & சில தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டுமே பென்ஷன் கிடைக்கிறது. தவிர, அடல் பென்ஷன் யோஜனா, PM ஷ்ரம் யோகி மந்தன் ஆகிய அரசு பென்ஷன் திட்டங்கள் உள்ளன. ஆனால், டெலிவரி பணியாளர்கள், கட்டுமானம், வீட்டுவேலை போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு எந்த பென்ஷன் பாதுகாப்பு இல்லை. இதனால், 18 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில், புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.

News February 26, 2025

அனைவருக்கும் பென்ஷன்: விரைவில் புதிய திட்டம்

image

நாட்டில் உள்ள அனைவருக்கும் பலனளிக்கும் வகையில், புதிய பென்ஷன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. ‘யுனிவர்சல் பென்ஷன் திட்டம்’ ஒன்றை உருவாக்கி, தற்போது நடைமுறையில் இருக்கும் தேசிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட அனைத்து பென்ஷன் திட்டங்களையும் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளது. 18 வயது நிரம்பிய யாரும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். ஆனால், அரசு பங்களிப்பு எதுவும் இருக்காது எனத் தெரிகிறது.

error: Content is protected !!