News February 26, 2025
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு: ஒருமுறை மட்டும் எழுதலாம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 முறை எழுதும் வரைவு திட்டத்துக்கு சிபிஎஸ்இ நேற்று ஒப்புதல் அளித்தது. அதில் உள்ள அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் மாணவர்கள் 2 முறையும் கட்டாயம் தேர்வு எழுத வேண்டியதில்லை, முதல் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதினால், 2ஆவது முறை எழுதுவது அவர்களது விருப்பம், 2ஆவது தேர்வில் குறிப்பிட்ட பாடங்களை மட்டும் தேர்வு செய்தும் எழுதலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 27, 2025
அடுத்த மகா கும்பமேளா எப்போது?

பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாள்களாக நடைபெற்றுவந்த மகா கும்பமேளா இன்றோடு நிறைவு பெற்றது. இதனையடுத்து, 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மகா கும்பமேளா 2037ஆம் ஆண்டு பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும். இதற்கு முன்பாக, வரும் 2027ஆம் ஆண்டு நாசிக் நகரில் பூர்ண கும்பமேளா, 2033ஆம் ஆண்டு ஹரித்வாரில் மகா கும்பமேளா ஆகியவை நடைபெறவுள்ளன. நீங்கள் கும்பமேளாவில் புனித நீராடினீர்களா?
News February 27, 2025
கும்பமேளா நிறைவு: ஒரேநாளில் 1.4 கோடி பேர் நீராடல்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணிசங்கமத்தில் 45 நாள்களாக நடைபெற்ற மகா கும்பமேளா, மகாசிவராத்திரியான இன்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று மட்டும் 1.4 கோடி பேர் திரிவேணிசங்கமத்தில் புனித நீராடினர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 66.21 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். இந்தத் தகவலை பகிர்ந்துள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், இதுவொரு உலக வரலாறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
News February 27, 2025
தமன்னாவுடன் காதலா? கார்த்தி விளக்கம்

பையா, சிறுத்தை படங்களில் கார்த்தியுடன் தமன்னா இணைந்து நடித்திருந்தார். இதனால் 2 பேரும் காதலிப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து, அண்மையில் கார்த்தி அளித்த பேட்டியில், அது வதந்தி என்றும், ஆனால் அந்த வதந்திகளை தாம் ரசித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் வதந்திகளை நம்பி, தனது மனைவி தன்னிடம் ஹீரோயின்களை தொடாமல் நடிக்க முடியாதா என கேள்வி கேட்டதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.