News February 26, 2025

அரசுப் பள்ளியிலேயே மாணவன் மரணம்

image

நாமக்கலில் அரசுப் பள்ளிக் கழிவறையில் 9ஆம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் இறப்புக்கு முறையான காரணம் கேட்டு, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில், தேனியில் கல்லூரி மாணவர் மரணத்திற்கு எறும்பு கடித்தது தான் காரணம் என கூறிய போலீஸ், இந்த மாணவன் இறப்பிற்கு என்ன சொல்லப் போகிறது என்று உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Similar News

News February 26, 2025

மகளை பெற்ற தந்தையா… ஹேப்பி நியூஸ்

image

மகள்களை பெறாத தந்தையரை விட, மகள்களை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம்.

News February 26, 2025

பிரதிநிதித்துவத்தை இழக்கும் தென்மாநிலங்கள்: ஆ.ராசா

image

தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்கக்கூடாது என ஆ.ராசா கூறியுள்ளார். தொகுதி விகிதாச்சாரமா, மக்கள் தொகை விகிதாச்சாரமா என்பது குழப்பமாக உள்ளதாகவும், மக்களவைத் தொகுதியை மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என்றும் எச்சரித்துள்ளார். வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது TNக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் சாடியுள்ளார்.

News February 26, 2025

‘L2: எம்புரான்’ போஸ்டர் வெளியீடு

image

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லாலின் ‘L2: எம்புரான்’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் பாகத்தில் ஸ்டீபன் நெடும்பள்ளி குறித்த கதை வெளியான நிலையில், 2வது பாகம் குரேஷி அபிராம் குறித்த கதையாக அமைந்துள்ளது.

error: Content is protected !!