News February 26, 2025

லெப்ட் ஹேண்டில் டீல் செய்து கடந்துள்ளேன்: விஜய்

image

அரசியல் என்றாலே வேற லெவல் தான் என தனது ஸ்டைலில் பேசத் தொடங்கிய விஜய், மக்களுக்கு ரொம்ப பிடித்தவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அனைவரும் வரவேற்பார்கள் என்றார். ஆனால், ஒரு சில பேர் மட்டும் எரிச்சலடைவார்கள் என ஆளுங்கட்சியை மறைமுகமாக விமர்சித்தார். இப்படிப்பட்ட அரசியல் களத்தில் பயமில்லாமல், எதிர்ப்புகளை எல்லாம் இடது கையால் டீல் பண்ணி முதலாவது ஆண்டை கடந்திருப்பதாக பேசினார்.

Similar News

News March 11, 2026

தமிழக தேர்தல் தேதி.. ECI சொன்ன புதிய தகவல்

image

அடுத்த 3 முதல் 5 நாள்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக ECI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN, கேரளா, புதுவையில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 3 -4 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.

News March 11, 2026

IPL-ல் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலயே!

image

IPL போட்டிகள் மார்ச் 28-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் IPL Fever தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் ஹைப் ஏற்றும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது IPL முதல் போட்டியிலேயே RCB-ம் CSK-ம் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மார்ச் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 11, 2026

பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்: ஐ.பெரியசாமி

image

மோடி அரசின் செயல்பாடு 100 நாள் வேலை திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக்கட்டும் முடிவில் இருப்பதையே காட்டுவதாக ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து EPS பச்சைத் துரோகம் செய்துவிட்டார் என சாடிய அவர், கிராமபுறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கு துணைபோன EPS-க்கு மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.

error: Content is protected !!