News February 26, 2025

பண்ணையாளர்களை அகற்றுவதே இலக்கு: விஜய்

image

பண்ணையாளர்களை அரசியலிலிருந்து அகற்றுவதே தவெகவின் லட்சியம் என விஜய் கூறியுள்ளார். எளிய மக்கள் அரசியலுக்கு வருவதும், அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படுவதும் சிலருக்கு பிடிக்கவில்லை என்றார். மேலும், சோஷியல் மீடியாவில் மாறி, மாறி ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாக #GetOutModi, #GetoutStalin விவகாரத்தை கடுமையாக சாடினார். விஜய் பண்ணையார்கள் எனக் குறிப்பிட்டது யாரை? உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 9, 2026

மார்ச் 14-ல் பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம்

image

டெல்லியில் வரும் 14-ம் தேதி பாஜக ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பணிகள் குறித்தும், கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பட்டியல், வேட்பாளர்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகின்றன. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, நிதின் நபின், வானதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

News March 9, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 சரிவு!

image

<<19333418>>சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியால் சென்னையில் தங்கம் விலை இன்று(மார்ச் 9) சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம், 1 கிராம் ₹14,950-க்கும், சவரன் ₹1,19,600-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி 1 கிராம் ₹290-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,90,000-க்கும் விற்பனையாகிறது.

News March 9, 2026

‘ஜன நாயகன்’ படத்துக்கு இன்று முக்கியமான நாள்!

image

‘ஜன நாயகன்’ படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் இன்று ரிவைசிங் கமிட்டி படத்தை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுமுகமாக முடியும் பட்சத்தில் படம் மார்ச் 19-ல் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரத்தினர் சொல்கின்றனர். இது விஜய்யின் கடைசி படம் என கூறப்படுவதால் தேர்தலுக்கு முன் படம் ரிலீசாகுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

error: Content is protected !!