News February 26, 2025
25 ஆண்டுகள் கழித்து.. அஜித்துடன் நடிக்கும் ஷாலினி?

25 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஷாலினி நடிக்க இருப்பதாக செய்தி வைரலாகி வருகிறது. குட் பேட் அக்லி டீசர் அறிவிப்பு வீடியோவில், ஒரு பங்களா காட்டப்பட்டது. அதே பங்களா முன்பு போட்டோ எடுத்து அதை ஷாலினி வெளியிட்டுள்ளார். ‘இவுங்க எதுக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு போணும்… ஒருவேள இருக்குமோ’ என ரசிகர்கள் கேட்க தொடங்கி விட்டனர். ஷாலினி 2001ல் பிரியாத வரம் வேண்டும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
Similar News
News February 26, 2025
8 மாவட்டங்களில் நாளை PF சிறப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், 8 மாவட்டங்களில் நாளை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து PF பயனாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
News February 26, 2025
தப்பிச்சோம்டா சாமி…

பூமியின் மீது ’சிட்டி கில்லர்’ விண்கல் மோதுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ESA) தெரிவித்துள்ளது. இந்த விண்கல் 2032ஆம் ஆண்டு பூமியில் மோதுவதற்கு 3% மட்டுமே வாய்ப்புகள் இருப்பதாக நாசா கூறியிருந்தது. இந்நிலையில், தொடர் ஆய்வுகளுக்குப்பின் அது மோதுவதற்கான சாத்தியக்கூறு 0.001%ஆக குறைந்துள்ளது. முன்னதாக, அந்த விண்கல் சென்னையில் மோத வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
News February 26, 2025
சீமானுக்கு எதிராக புதிய ஆதாரங்களை வழங்கிய நடிகை

சீமான் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை விஜயலட்சுமியிடம் 5 மணி நேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி பணம், நகைகளை சீமான் வாங்கியது பற்றிய முக்கிய ஆதாரங்களை வளசரவாக்கம் போலீசாரிடம் அவர் சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சீமானுக்கு பெரும் சிக்கலாக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.