News February 26, 2025
கல்யாணம் பண்ணலனா வேலை இல்லையாம்..

வரும் செப்டம்பருக்குள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சீனாவில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், இந்த உத்தரவை பிறப்பித்தாகவும் தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியாக, நெட்டிசன்கள் கொதித்துப் போய், கண்டிக்க தற்போது இந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. உங்கள் கருத்து என்ன இதில்?
Similar News
News February 26, 2025
சிறுவனின் வயிற்றில் 2 கால்கள்

உ.பி.யை சேர்ந்த சிறுவனுக்கு வழக்கமான 2 கால்கள் தவிர, வயிற்றிலும் 2 கால்கள் வளர்ந்தன. இதையடுத்து உடலில் தேவையின்றி வளர்ந்த அந்த 2 கால்களை அகற்ற, டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டான். அங்கு அவன் வயிற்றில் வளர்ந்த 2 கால்களை ஆபரேசன் மூலம் டாக்டர்கள் அகற்றினர். வயிற்றில் இரட்டை கரு உருவாகி ஒரு கருவில் உருவான கால்கள், இதுபோல இன்னொரு கருவில் சேர்ந்து இருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
News February 26, 2025
பஸ்ஸில் பலாத்காரம்… பெண்ணுக்கு கொடுமை

மகாராஷ்டிரா, புனேவில் ஊருக்கு செல்வதற்காக 26 வயது பெண், மாநில பஸ் நிலையத்துக்கு அதிகாலை வந்துள்ளார். அவரிடம் ஒருவன், நீ போக வேண்டிய பஸ் வேறு பிளாட்பாரத்தில் நிற்கிறது எனக் கூறி, ஆளில்லா இடத்தில் நிறுத்தியிருந்த காலி பஸ்ஸை காட்டியுள்ளான். அதில் பெண் ஏறியவுடன் உள்ளே நுழைந்த அந்நபர், பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான். இத்தனைக்கும் அங்கிருந்து 100 மீ தூரத்தில் தான் போலீஸ் ஸ்டேஷன் உள்ளதாம்.
News February 26, 2025
8 மாவட்டங்களில் நாளை PF சிறப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், 8 மாவட்டங்களில் நாளை சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து PF பயனாளர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.